வெசாக் தினத்தை முன்னிட்டு இம்முறை கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் 20 பெரிய தோரணங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்குப் புறம்பாக, கொழும்பை ஐந்து வெசாக் வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் இவை காட்சிப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.