நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், கொழும்பின் பல பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அரச ஊடகங்களுக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர் உட்புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக தெரிய வருகிறது.
அரச ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்படுவதாக கூறி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களால் அரச லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை சற்று முன்னர் முற்றுகையிட்டுள்ளனர்.
எனினும் அதிரடி பொலிஸார் விரைந்து செயற்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அனைத்து அரச ஊடகங்களுக்கும் தற்போது பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

