சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் கூட்டமைப்பு (பீபா) மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புக்களை பெற்று தெரிவு செய்யப்பட்ட 10 நகரங்களில் 10 கால்பந்தாட்ட மைதானங்களை நிர்மானிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவிக்கிறது.
இவ்விடயம் குறித்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் கூறுகையில்,
“சுகததாச விளையாட்டரங்குக்கு சொந்தமான திறந்தவெளி மைதானத்தின் நிர்வாகத்தை இலங்கை கால்பந்தாட்டத சம்மேளனத்திற்கு ஒப்படைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உடன்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பீபா தலைவர் கியானி , இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தின்போது பிரதமர் உடன்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், சுகததாச விளையாட்டரங்கின் திறந்தவெளி மைதானத்தின் நிர்வாகத்தின் பொறுப்பை ஏற்பதை விடவும் முழுமையான கால்பந்தாட்ட அரங்கொன்றை கொழும்பில் அல்லது கொழும்புக்கு அருகாமையில் நிர்மானிப்பதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்ளேனம் கடினமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் கூட்டமைப்பு (பீபா) மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புக்களை பெற்று தெரிவு செய்யப்பட்ட 10 நகரங்களில் 10 கால்பந்தாட்ட மைதானங்களை நிர்மானிப்பதற்கான முயற்சிகளையும் நாம் எடுத்து வருகிறோம்” என்றார்.
பெலியத்த டி.ஏ. ராஜபக்ச விளையாட்டு மைதானத்தை 33 வருட குத்தகைக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச உடன்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]