ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக ரோசி சேனநாயக்காவை நிறுத்தியுள்ள நிலையில், அக்கட்சி சார்பு பிரதி மேயர் பதவிக்கு பலத்த போட்டி நிலவுவதாக அறியக்கிடைக்கிறது.
கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி, கைப்பற்றினால் பிரதி மேயர் பதவி முஸ்லிம் ஒருவரை வந்தடைவதற்கான வாய்ப்பு உள்ள நிலையிலேயே அப்பதவியை கைப்பற்ற முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் கடும் போட்டியில் இறங்கியுள்ளதாக அறியவருகிறது.
இதுதொடர்பிலான முக்கிய கூட்டமொன்று நேற்று திங்கட்கிழமை (04) மலிக் சமரவிக்கிரமவின் வீட்டில் நடைபெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.