Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொழும்பில் உணவகங்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

August 29, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொழும்பில் உணவகங்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் பூனைக்கழிவுகள் அடங்கிய மனித நுகர்விற்கு பொருந்தாத உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்த 30 கடைகளில் சோதனை மேற்கொண்ட நிலையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகர சுகாதார வைத்திய அதிகாரி மனோஜ் ரொட்ரிகோ தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உணவுகளில் பூனை கழிவு

அதற்கமைய, இராஜகிரியில் உள்ள பிரபல உணவு விற்பனை நிலையத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1980 ஆம் ஆண்டின் 26 ஆம் எண் உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 32 இன் கீழ் 2011ஆம் இலக்க உணவு பாதுகாப்பு உத்தரவுகளை மீறியமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 8 சந்தேக நபர்களும் கொழும்பு புதுக்கடை மற்றும் கங்கொடவில நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அபராதம் விதிப்பு

அதற்கமைய, குற்றத்தின் தன்மைக்கேற்ப, 5000, 10000, 15000 ரூபாய் என 82500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது, ​​சில கடைகளில் சமைத்த உணவுகள் இறைச்சி மற்றும் மீன் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

மேலும் சில கடைகளில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் மொய்க்கும் வகையில் உணவுகள் வைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

Previous Post

சம்பியனை உறுதி செய்ய மாத்தறை சிட்டி கழகத்திற்கு ஒரே ஒரு வெற்றி தேவை

Next Post

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Next Post
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures