Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

April 3, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 65 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

ஹென்றிச் க்ளாசன், ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், ஜெய்தேவ் உனத்காட், ஏஷான் மாலிங்க ஆகியோரின் துல்லியமான பந்தவீச்சுகள், நிட்டிஷ் குமார் ரெட்டியின் சகலதுறை ஆட்டம் என்பன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

அத்துடன் மிகவும் முக்கிய வேளைகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கெமரன் க்றீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகிய இருவரும் ரன் அவுட் ஆனதும் சன்ரைஸ் ஹைதராபாத்துக்கு சாதகமான முடிவு கிடைக்க உதவியது.

இந்த இரண்டு ரன் அவுட்களிலும் இலங்கை வீரர் ஏஷான் மாலிங்க முக்கிய பங்காற்றினார்.

கெமரன் க்றீனை நேரடியாக ரன் அவுட் செய்த மாலிங்க, ரகுவன்ஷியின் ரன் அவுட்டிலும் பங்களிப்பு செய்தார். அத்துடன அஜின்கியா ரஹானேயின் சற்று சிரமமான பிடியையும்  மாலிங்க  எடுத்தார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்தில் ஓர் அணி பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

நான்கு வீரர்கள் 35க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி வெறும் 34 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ட்ரவிஸ் ஹெட் 21 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 46 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 48 ஓட்டங்களையும் விளாசினர்.

அணித் தலைவர் இஷான் கிஷான் சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். அனிக்கெட் வர்மா ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (118 – 4 விக்.)

இந் நிலையில் ஹென்றிக் க்ளாசன், நிட்டிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஹென்றிச் க்ளாசன் 35 பந்துகளில் 52 ஓட்டங்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 24 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ளெசிங் முஸாரபானி 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வைபவ் அரோரா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கடினமான 227 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பின் அலன் 7 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 28 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

  கெமரன் க்றீன் (2),   அணித் தலைவர் அஜின்கியா ரஹானே (8) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் கண்டது.

ஆங்ரிஷ் ரகுவன்ஷி, ரின்கு சிங் ஆகிய இருவரும் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்த முயற்சித்த போதிலும் அவர்கள் இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரகுவன்ஷி ஆட்டம் இழந்தார்.

ரகுவன்ஷி 29 பந்துகளில் 6 பவுண்டறிகள். 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ரின்கு சிங் 25 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் சுனில் நரேன் 4 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 12 ஓட்டங்களைப் பெற்றார். அவரது விக்கெட்டை ஏஷான் மாலிங்க வீழ்த்தினார்.

பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்காட் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: நிட்டிஷ் குமார் ரெட்டி

Previous Post

2,000 லீற்றருக்கும் அதிக டீசல் சட்டவிரோதமாக சேமிப்பு: இருவர் கைது!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures