நபர் ஒருவர் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ ஜனபதய பகுதியில் இன்று அதிகாலை நடந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மன நோயாளியான மகனுக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலில், மகன் தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.