வெலிக்கடை சிறைச்சாலையின் பயிற்சிப் பாடசாலையின் பிரதான சிறை அதிகாரி மீது துப்பபாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 3 ஆம் திகதி அம்பலாங்கொடை – குளீகொடை சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியான குளீகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய திலின ருவன் திஹார ஜயரத்ன என்பவர் கொல்லப்பட்டார்.
குறித்த கொலைக்குச் சம்பவத்துடன் தொடர்பில் ஹிக்கடுவை பகுதியில் வைத்து சந்தேகத்துக்குரிய நபரொருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 63 ரவைகளும் 14 சிம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.