Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘கொரோனா’ தாண்டவம்;8 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்!

March 29, 2020
in News, Politics, World
0

உலக நாடுகளைப் புரட்டி எடுத்துவரும் பாரிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் இலங்கையிலும் தனது தாண்டவத்தைத் தினந்தோறும் காட்டத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் இன்று காலை இருவர் உட்பட இதுவரை 115 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவர்களில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையிலும், 9 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையிலும் ஏனைய 105 பேரும் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதற்கமைய கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் 94 பேரும், வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் 10 பேரும், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது எனவும், அவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களில், அதிகமானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஐத் தாண்டியுள்ளது. இதில் 25 பேர் வரையிலானோர் கொழும்பு மாவட்டத்துக்குள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டவர்களாவர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், இரத்தினபுரி, குருணாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இருந்தே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 21 வைத்தியசாலைகளில் 5 வெளிநாட்டவர்கள் உட்பட 199 பேர் கொரோனாத் தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இந்தநிலையில் அடுத்து வரும் இரு வாரங்களில் கொரோனா தொற்று பரவும் வேகம் இலங்கைக்குள் அதிகரிக்கலாம் எனும் சந்தேகம் நிலவும் நிலையில், ஊரடங்குச் சட்டக் காலப்பகுதியில் அனைவரையும் தத்தமது வீடுகளுக்குள்ளேயே தனிமைப்பட்டிருக்க அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

Previous Post

ஆறு மாவட்டங்கள் தொடர்ந்து முடக்கம்!

Next Post

சமுர்த்திக் கடன்: அரசு திருகுதாளம்!

Next Post

சமுர்த்திக் கடன்: அரசு திருகுதாளம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures