இலங்கை உள்ளிட்ட நாடுகளின், கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்க செனட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான நிதிஉதவியை 92 வீதத்தினால் குறைக்கும், டொனால்ட் ட்ரம்ப் அரசின் திட்டத்தை நிராகரித்து, அமெரிக்க செனட் சபையின், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான உப குழு கடந்தவாரம் வெளியிட்டுள்ள அறிக்கை யிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பல நாடுகளில், மரபணுச் சோதனைகள் மூலம், கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது.
எச்சங்களை அடையாளம் காணப்படுவதற்கு, மரபணுச் சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது.
இலங்கை, சிரியா, ஈராக், கம்போடியா, எல்சால்வடோர், குவாடமாலா ஆகிய நாடுகளில், தடயவியல் அடையாளம் காணும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
இந்த நாடுகளில், இடம்பெற்ற மனித குலத்துக்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான ஏனைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நீதித்துறை விசாரணைகள் தேவைப்படுகின்றன.
இலங்கைக்கான ஒட்டுமொத்த நிதி வெட்டையும் ஏற்க முடியாது, நிதியளிப்பதற்கு இலங்கைக்கு நிபந்த னைகளை விதிக்கலாம் – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.