கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண கணேமுல்ல பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கடந்த 01 ஆம் திகதி கம்பஹா – கணேமுல்ல பிரதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கணேமுல்ல பொலிஸாரால் கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் அந்நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலைசெய்யப்பட்ட வயோதிபர் எஸ். ராஜா என்ற பெயரில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறிருப்பினும் கொலைசெய்யப்பட்ட வயோதிபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்பட்ட வயோதிபரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த புகைப்படத்தில் உள்ள வயோதிபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கணேமுல்ல பொலிஸ் நிலையத்தின் 071 – 8591618 அல்லது 033 – 2260222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.