வீட்டில் உள்ள பெண்கள் தினமும் சமைப்பதற்கு காய் கறிகளை வெட்டும் பொழுது கையில் எதிர்பாராத விதமாகக் கத்தி வெட்டுப்பட்டு காயம் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. கத்திப் பயன்படுத்தும் அனைவரும் பயத்துடனே அதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இனி அந்தக் கவலை வேண்டாம், கத்தி வெட்டிலிருந்து உங்கள் கைகளை காப்பதற்காகப் பிரத்தியேக கை க்ளோவ்ஸ் ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று உருவாகியுள்ளது. அல்ட்ரா-உயர்-மூலக்கூறு-எடை கொண்ட பாலிஎத்திலீன் முறைப் படி அதிநவீன டைனிமா என்ற பொருளை உருவாக்கியுள்ளனர். மிக மெல்லிசாக இருக்கும் இந்தப் பொருள் மிக உறுதியான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது இதன் சிறப்பு. இந்த கை க்ளோவ்ஸ்களுக்கு “கட் ரெஸிஸ்டண்ட் க்ளோவ்ஸ்” என்ற பெயரை அந்நிறுவனம் வைத்துள்ளது.
இந்த கட் ரெஸிஸ்டண்ட் க்ளோவ்ஸ்கள் உயர் ரக அழுத்தமான வெட்டுகளையும் தடுக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய கத்தி முதல் பெரிய அளவில் உள்ள கத்திகளினால் ஏற்படும் வெட்டுகளை முற்றிலும் தடுத்து உங்கள் கரங்களை பாதுகாக்கின்றது. கத்திகள் மட்டுமின்றி எந்த விதமான கூர்மையான பொருட்களும் துளைக்க முடியாத வகையில், இந்த கை க்ளோவ்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஆன்லைன் விற்பனையாளர் வலைத்தளங்களில் இந்த கட் ரெஸிஸ்டண்ட் க்ளோவ்ஸ்கள் விற்பனைக்குக் கிடைக்கிறது.