வடக்கு மாகாண தொழில்துறைத் திணைக்களத் தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கைத்தெறி மற்றும் கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள் பங்குபற்றும் கைத்தொழில் உற்பத்தி இலவசக் கண்காட்சி இன்று சனிக் கிழமை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
வடக்கு மாகாண கைப்பணியாளர்கள் மற்றும் நெசவாளர்களினால் உருவாக்கப்படும் கைத்தெறி நெசவு உற்பத்திகள், களிமண் உற்பத்திகள், தும்பு ஓலை புல் சார்ந்த உற்பத்திகள், பிரம்பு முங்கில் குழாய் சார்ந்த உற்பத்திகள், உலோகக் கைப்பணிப் பொருள்கள், ஆபரணங்கள், சங்கீத உபகரணங்கள், துணிகளிலான கைப்பணிப் பொருள்கள், சிரட்டையிலான கைப்பணிப் பொருள்கள், சிப்பியினாலான கைப்பணிப் பொருள்கள், மர உற்பத்திப் பொருள்கள், தோற்பொருள்கள், கல்லாலான கைப்பணிப் பொருள்கள், பாரம்பரிய கலைவரைபுகளும் சிற்பங்களும், தென்னை பனை கித்துள் சார்ந்த உற்பத்திகள், நானாவித கைப்பணிப் பொருள்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கி, தேசிய அருங்கலைகள் பேரவை, புடவைக் கைத்தொழில் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைக்கவுள்ளார்.

