சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நாடு திரும்பியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று (28.07.2025) கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இன்று அவர் ஒரு மனு மூலம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாமல் ராஜபக்ச நேற்று (28) தனிப்பட்ட விஜயத்திற்காக இலங்கையிலிருந்து மாலைதீவு சென்றிருந்தார்.
இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுக விற்பனைக்கு எதிரான போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகத் தவறியதற்காக ஹம்பாந்தோட்டை தலைமை நீதவான் ஓஷத மகாராச்சி நேற்று நாமலுக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ச உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையாக தவறியதால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.