கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் இன்று இரவே இவர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் இச்சம்பவங்களுடன் தொடர்புடைய சகலரையும் எந்தவித தராதரமும் பாராமல் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
திகன மற்றும் புஜாபிடிய பிரதேசங்களில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவினரால் 10 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.