Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைதிகளை விடுவியுங்கள் – அனந்தி ஊடக அறிக்கை

March 22, 2020
in News, Politics, World
0

இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக அச்ச நிலைக்குள் வாழ்கின்ற போது இலங்கை அரசு தன்னை ஒரு ஜனநாயக அரசாக காட்ட முயல்கின்ற நிலையில் இனஅழிப்புக்கு ஆளாகி இன்றும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள்ளாகியுள்ள ஈழத்தமிழர்கள் சார்பிலும்;, முன்னாள் வடமாகாண மகளிர், புனர்வாழ்வு ,சமூகசேவைகள் அமைச்சர் என்ற வகையிலும் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

கொரோனா தாக்கத்தலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசு என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

காரணம் நீண்ட காலம் சிறையில் அவர்கள் வாழ்வது மட்டுமல்ல இந்த வைரஸ் நோய் தாக்கம் சிறையில் ஒருவருக்கு ஏற்பட்டால் ஏனையவர்களை பாதுகாப்பது கடினம். இடநெருக்கடியான இடத்தில் நோய்எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக இவர்கள் இருப்பதனாலும், வயது, நோய், உடல்;;உளதாக்கம் இருப்பதாலும் இவர்களை இந்நோய் மோசமாகப்பாதிக்கும்.

உலகமே அச்சமுற்றுள்ள வேளையில் இவர்களுடைய குடும்பங்கள் ; விரக்தியுடனும் ஏக்கத்துடனும் தங்கள் அன்புக்குரியவர்கள் வருவார்கள் என வழிமேல் விழி வைத்து காத்து நிற்கின்றார்கள்.

இவர்களுடைய விடுதலை ஒரு நிபந்தனை அடிப்படையிலோ அல்லது பிணைஅடிப்படையிலோ அமையலாம்.

முடியாதது என்று எதுவும் இல்லை. மனிதாபிமான நோக்கில் இலங்கை மாணவர்களை சீனாவில் இருந்து ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து அழைத்துவர முடியுமானால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க முடியாது?

சர்வாதிகார அரசான ஈரான் அரசு தனது அரசுக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த 20000 கைதிகளை இந்த நெருக்கடியான சூழலில் விடுதலை செய்துள்ளது.

ஏன் ஜனநாயக அரசாங்கம் என்று தன்னை வகைப்படுத்திக்கொண்ட இலங்கை இவர்களை விடுதலை செய்ய முடியாது கடந்த ஏப்பிரல் குண்டுதாக்குதலில் சம்பந்தப்பட்வர்களாக கருதப்பட்ட பலர்பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் ஏதோ ஒரு வகையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எங்கள் உறவுகள் மட்டும் அதே பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல்லாண்டு காலம் சிறையில் உள்ளனர்.
எனவே தமிழருக்கு சட்டம் நீதி வெவ்வேறாக பாராது இன நல்லிணக்கம் பேண தமிழ் அரசியல் கைதிகளை இந்த நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

(ச. அனந்தி)
செயலாளர் நாயகம்,
ஈழத்தமிழர் சுயாட்சிகழகம்.
முன்னாள் வடமாகாண மகளிர், புனர்வாழ்வு, சமூகசேவைகள் அமைச்சர்

Previous Post

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களை இனங்காண பொலிசார் இராணுவத்தினர் நடவடிக்கை

Next Post

கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கை

Next Post

கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures