கைக் குழந்தையின் ஆடையில் மறைத்து சிறையிலுள்ள கணவருக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி, உத்தரானந்த மாவத்தையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கிடைத்த தகவலுக்கமையவே இவர் கைது செய்யப்பட்டார்.
11 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் விற்பனையாளரான அவரது கணவர் கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தொடர்ந்தும் மனைவி போதைப்பொருள் வழங்குவதாகவும், ஒரு பக்கட் 4000 ரூபாய் சிறைச்சாலையினுள் விற்பனை செய்யப்படுவதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது 11 மாத குழந்தையின் ஆடையில் மறைத்து கோட்டை நீதிமன்றத்துக்கு சந்தேக நபரான பெண் வருகைத்தந்த போதே, கைது செய்யப்பட்டார்.
அவரிடம் கைப்பற்றப்பட்ட ஹேரோயினின் பெறுமதி கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபா பெறுமதியானது எனத் தெரிவிக்கப்பட்டது.