ஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் 45ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
டுபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெங்கடேஷ் ஐயர் 67 ஓட்டங்களையும் திரிபத்தி 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் ஷமி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 67 ஓட்டங்களையும் மாயங் அகர்வால் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் சிவம் மாவி, சுனில் நரேன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 49 பந்துகளில் 1 சிக்ஸர் 9 பவுண்ரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]