மங்கோலியாவில் 247 பேருக்கு கே.எஃப்.சி யில் உணவு உண்ட பின் உடல் கோளாறுகள் ஏற்பட்டதால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மங்கோலியாவின் தலைநகரான உளான்பாத்தரில் கடந்த வாரம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தரமற்ற உட்கட்ட ஆய்வுச் சோதனையால் இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக பெருநகர நிபுணத்துவ ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் 247 பேர் வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகக் கூறியுள்ளது. இதில் தற்போது 47 பேரின் உடல் நிலை மோசமாகியிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

