முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரசனைகளை தமிழர்களே கேட்ட சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா ஓமந்தையில் மக்கள் சந்திப்பொன்றினை முன்னாள் அமைச்சரும் இடது சாரிகட்சியின் தலைவருமான திஸ்ஸவிதாரண ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது அவர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து பேசியதுடன் ஐக்கிய தேசியக்கட்சி அமெரிக்காவிடம் நாட்டை தாரைவார்ப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை இல்லாது ஆக்கவேண்டும் எனவும் உரையாற்றினார்.
அவரது உரையின் பின்னர் குறித்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தவர்கள் முன்னாள் அமைச்சரிடம் நீங்கள் கோத்தபாயவை ஆதரிக்க சொல்கின்றீர்கள்.
ஆனால் தமிழ் மக்கள் காணாமல் போனோர் விடயம், அரசியல் கைதிகள் விடயம், காணி விடயங்கள் தொடர்பில் பல தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றர்.
இதற்கு உங்களிடம் என்ன தீர்வு உள்ளது என கேட்டனர்.
இதன்போது கடும் தொனியில் பதிலளித்த முன்னாள் அமைச்சர் இவை தொடர்பாக நாமும் எமது கட்சி சார்பாக கோத்தபாயவிடம் கையளித்த கோரிக்கைகளில் உள்ளடக்கியுள்ளோம்.
எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறும் பொதுஜனபெரமுனவின் கூட்டத்தில் கோத்தபாயவே இதற்கான பதிலை வழங்குவார்.
அங்கு வந்து பாருங்கள் வடக்கு மக்ளுக்கான பல திட்டங்களை அவர் அங்கு தெரிவிப்பார் என தெரிவித்தார்.
இதன் பின்னர் அங்கிருந்த மற்றுமொருவர் விமல் வீரவன்ச யாழ்ப்பாணம் விமான நிலைய பெயர்பலகை தொடர்பாக தெரிவித்த கருத்தையும் தேசியக்கொடியை மாற்றியமைக்கின்றனர்.
இவ்வாறானவர்கள் உங்களுடன்தானே இருக்கின்றர். இவர்களது இனவாதத்தினை பார்க்கின்றபோது எவ்வாறு வாக்களிக்க முடியும் என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் வடக்கிலும் விக்னேஸ்வரன் மற்றும் சிவாஜிலிங்கத்தின் கருத்துக்களால் தென்னிலங்கை மக்களும் அச்சம் கொண்டுதான் உள்ளனர் என தெரிவித்தார்.

