டிடிவி தினகரன், கேரளா மக்களுக்கு, டிவிட்டரில் ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: உலகமெங்கும் வாழ்ந்திடும் மலையாள மொழி பேசும் மக்கள் விமரிசையாக கொண்டாடும் ஓணம் பண்டிகை, இந்தாண்டு கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மிக விரைவாக மழை வெள்ள பாதிப்பு சுவடுகள் மாறிவிடவேண்டும், என்றும் பூரண மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் இறைவனை வேண்டுகிறேன்.

