நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது,
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவின் கைவேலி பகுதியில் 510 கிராம் கேரள கஞ்சா மற்றும் 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இளவாலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
அத்தோடு, காலி துறைமுக பொலிஸ் பிரிவின் மகுலுவ ரயில் நிலையத்தில் 05 கிலோ 260 மில்லிகிராம் கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகள மேற்கொண்டுவருகின்றனர்.