தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிப்பேன். ஊடகங்களை கண்டு ஒழியமாட்டேன் என்று ஜாமீனில் விடுதலையான ஸ்வப்னா கூறினார்.
வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் கடத்தல் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா மற்றும் ஊழியர்களை கைது செய்தனர். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தங்க கடத்தல் விவகாரத்தில் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரித்தது.
ஓராண்டுக்கும் மேலாக ஜெயிலில் இருந்த ஸ்வப்னா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தில் தாயாருடன் தங்கி உள்ள அவர், நேற்று கொச்சி சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிப்பேன். ஊடகங்களை கண்டு ஒளியமாட்டேன்.
தற்போது உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுக்கிறேன். வக்கீலை பார்ப்பதற்காகவே கொச்சி வந்தேன், என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]