கேப்பாப்புலவு காணிகளில் மனித புதைகுழிகள் இருக்கும் காரணத்தினாலேயே, காணிகள் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர் என முன்னாள் வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கோட்டாபய கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதியிலும் மனித புதைகுழிகள் இருக்கும் என்பதோடு அதனை விடுவிக்கும் பட்சத்தில் தங்களின் செயற்பாடு வெளிப்பட்டுவிடுமென்ற பயத்தில் அதனை விடுவிக்க தயங்குவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும்வரை அவர்கள் போராட்டத்தை கைவிடமாட்டார்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.