மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் கே.சி லோகேஸ்வரனிடம் அறிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளரை பதவி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.