கென்ய தலைநகர் நைரோபியில் அல் ஷபாப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினைந்தாக அதிகரித்துள்ளது.
தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் 11 பேர் கென்யர்களும், ஒரு அமெரிக்கரும், பிரித்தானியரும் உள்ளடங்குவதாகவும் ஏனைய இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்திருப்பதை அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
நைரோபியில் பாதுகாப்புமிக்க அலுவலக தொகுதிகள் அமைந்துள்ள பகுதி மற்றும் நட்சத்திர விடுதிக்குள் நுழைந்;த சுமார் நான்கு ஆயுததாரிகள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கைக்குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் விடுதி வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்களும் தீக்கிரையாகின. பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து அங்கு விரைந்த பொலிஸார் விடுதியில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.

