மினுவாங்கொடை கமன்கெதர பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வீட்டின் அருகில் மறைந்திருந்த இனந்தெரியாதோரால் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கூரிய ஆயுதங்களால் தந்தை மற்றும் மகனின் கழுத்து மற்றும் தலைப்பகுதிகளைத் தாக்கியுள்ளனர்.
தாக்குலுக்கு உள்ளான இருவரும் மினுவங்கொடை மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மினுவங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

