பெண்கள் இருவர் கூரிய ஆயதமொன்றால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கொஸ்கம – சீதாவக பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
34, 78 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பேத்தி, மற்றவர் பாட்டி எனக் கூறப்படுகிறது.இருவரின் சடலங்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

