முன்னாள் அமைச்சரும் குருணாகல் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயரத்ன ஹேரத் கூட்டு எதிர்க் கட்சிக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கி வந்த அவர், பொல்கஹவெல தொகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சி நேற்று (27) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் இவர் கலந்துகொண்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக பொது மக்களும் ஒன்று திரண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் எம்.பி. ஜயந்த ஹேரத் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்கியுள்ளார். பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க திர்மானித்துள்ளார்.
இன்று மீண்டும் மஹிந்த சார்பு குழுவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.