தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்குத் தேவை என்று கூறி யுள்ள அரசின் பேச்சாளர் கெஹலிய, எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நாடாளுமன்றம் கூட்டப்படு வதற்கு வாய்ப்பில்லை என்றார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எமக்கு கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். கூட்டமைப்பிலிருந்து வந்து வியாழேந்திரன் எங்களுடன் இணைந்து கொண்டார். கூட்டமைப்பிலிருந்து மேலும் நான்கு பேர் எங்களுடன் வந்து இணைந்து கொள்வார்கள்.
சபாநாயகர் எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று அறிவித்தாலும் அரச தலைவர் இன்னமும் அரசிதழில் பிரசுரிக்கவில்லை. நாடாளுமன்றம் 16ஆம் திகதியே கூட்டப்படும் – என்றார்.

