ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பது தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
நேற்றுமுன்தினம் சு.கவின் மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவையே கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்க இருப்பதாக சு.க தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுன் முடிவு நேற்று அறிவிக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க அறிவித்திருந்த போதிலும், அது இன்று வரை பின்போடப்பட்டுள்ளது.

