தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவு இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கர்நாடக விவசாயிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக விவசாயிகள் கர்நாடகத்துக்கு வழங்கப்பட்ட கூடுதல் ஒதுக்கீடு போதாது என்றும் கர்நாடகத்க்கு மேலும் கூடுதல் ஒதுக்கீடு வேண்டும் என்றும் கோரினர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று தெரிவித்த அவர்கள், தீர்ப்பின் மூலம் கர்நாடகத்துக்கு அநியாயம் இழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனிடையே ஓசூரில் கன்னட ரக் ஷண வேதிகே அமைப்பினர் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்