Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­ற கட்சிக்கு ஆட்சி

February 23, 2018
in News, Politics, Uncategorized, World
0
கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­ற கட்சிக்கு ஆட்சி

உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் எந்­தக் கட்சி கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்­டுள்­ளதோ அந்­தக் கட்சி ஆட்சி அமைப்­பதை கூட்­ட­மைப்பு எதிர்ப்­ப­தில்லை என்று அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் நேற்று முடிவு செய்­யப்­பட்­டது.

பரு­த்தித்­துறை, சாவ­கச்­சேரி நகர சபை­கள் மற்­றும் நெடுந்­தீவு பிர­தேச சபை என்­ப­வற்­றின் ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்­காக கூட்­ட­மைப்பு மோது­வ­தில்லை என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

“கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்ட கட்சி ஆட்சி அமைப்­பது, அதனை ஏனைய கட்­சி­கள் குழப்­பு­வ­தில்லை என்ற கொள்­கை­யில் நாம் உறு­தி­யாக இருக்­கின்­றோம். ஏனைய கட்­சி­கள் அதி­லி­ருந்து நழு­வி­யி­ருந்­தா­லும், நாம் எமது கொள்­கை­யில் உறு­தி­யாக இருப்­பது என்று முடிவு செய்­துள்­ளோம். மக்­கள் ஏனைய கட்­சி­க­ளின் பொறுப்­பு­ணர்வை தெரிந்து கொள்­ளட்­டும்” – என்று கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்ற யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை, நல்­லூர் பிர­தேச சபை, கர­வெட்டி பிர­தேச சபை ஆகி­ய­வற்­றில் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும் ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரி­வித்­தி­ருந்­தார்.

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற பரு­தித்­துறை நகர சபை மற்­றும் சாவ­கச்­சேரி நகர சபை­யில் ஆட்சி அமைப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நகர்­வு­களை மேற்­கொண்­டி­ருந்­தது. அதே­போன்று ஈ.பி.டி.பி. கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்ட நெடுந்­தீவு பிர­தேச சபை­யில் ஆட்சி அமைப்­ப­தற்­கும் சுயேச்­சைக் குழு, கூட்­ட­மைப்­பு­டன் பேச்சு நடத்­தி­யி­ருந்­தது. இந்த நகர்­வு­க­ளால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் குழப்ப நிலை தோன்­ற­லாம் என்று எதிர்­வு­கூ­றப்­பட்­டி­ருந்­தது.

இந்­த­நி­லை­யில், எந்­தக் கட்சி கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்­டதோ அந்­தக் கட்சி ஆட்சி அமைப்­பது என்­றும் ஏனைய கட்­சி­கள் அத­னைக் குழப்­பக் கூடாது என்­றும் பொது­அ­மைப்­புக்­கள் முன்­வைத்த கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் செயற்­ப­டு­வ­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நேற்­றுத் தீர்­மா­னித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுக்களிலேயே மாற்றம்

Next Post

இளைஞர்களுக்கு முதலிடம் வழங்கும் புதிய அமைச்சரவை மாற்றம்

Next Post

இளைஞர்களுக்கு முதலிடம் வழங்கும் புதிய அமைச்சரவை மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures