குழாய்களில் இருந்து நீர் விரயமாகுவதைத் தவிர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் இலங்கை 3ஆம் இடத்தில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரம் தவிர ஏனைய பகுதிகளில் நீர் விரயமாவது 22 வீதமாக காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ள லாண்டரி திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர் வீண் விரயமாவது 48 வீதமாக காணப்பட்டதுடன், அந்தத் திட்டம் நிறைவுக்கு வரும்போது 18 வீதமாக குறைவடையும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
தற்போது லாண்டரி திட்டம் நிறைவடைந்துள்ள பகுதிகளில், நீர் விரயமாவது 12 வீதமாக உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.