குறை சொல்லும் நேரமில்லை, குழந்தை மீட்பே குறிக்கோள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 62 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
பாறைகள் இருப்பதால் குழிதோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மீட்புப் பணி 4 வது நாளாகத் தொடர்கிறது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளப் பதிவில், ‘அரசு எந்திரத்தையோ, ஆழ்துளை எந்திரத்தையோ, குறை சொல்லும் நேரமில்லை குழந்தை மீட்பே குறிக்கோள்.
பாறை என்பது நல்வாய்ப்பு மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்’ என தெரிவித்துள்ளார்.

