குளிர்கால புயல் எச்சரிக்கை!

குளிர்கால புயல் எச்சரிக்கை!

பனி வாரிகளையும் தோலினால் ஆன மேலாடைகளையும் இப்போதே அகற்றி விட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமில்ரன், நயாகரா, ஓக்வில் மற்றும் பேர்லிங்டன் உட்பட ரொறொன்ரோவின் பாகங்களிற்கு குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை இரவு அளவில் ஆக கூடியதாக 30-சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

திங்கள்கிழமை ஆரம்பிக்கும் பனிபொழிவு புதன்கிழமை காலை வரை தொடரும் என கனடா சுற்று சூழல் எச்சரித்துள்ளது.
சில பகுதிகள் ஐந்து சென்ரி மீற்றர்கள் அளவிலான ஓரளவு சிறிதளவிலான பனிப்பொழிவு இன்று மாலை அளவில் காணப்படும். இரவு முழுவதும் தொடங்கி செவ்வாய்கிழமை காலை வரை கனத்த அளவிலான பனி பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது என கனடா சுற்று சூழலின் வானிலை ஆலோசனை கூறுகின்றது.

மொத்த பனிப்பொழிவு 15 முதல் 25 சென்ரிமீற்றர்கள் எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் ஹமில்ரன் மற்றும் நயாகரா பகுதிகளில் 30சென்ரி மீற்றர்கள் வரை ஏற்படலாம்.

இக்கொந்தளிப்பான வானிலையின் போது வாகன சாரதிகள் அத்தியாவசியமற்ற பயணங்களை மீள திட்டமிட கருதுமாறு சுற்று சூழல் கனடா ஆலோசனை வழங்கியுள்ளது.

இன்று மாலை தொடங்கி செவ்வாய்கிழமை வரை பலமான வன்காற்று மணித்தியாலத்திற்கு 60கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசுமாதலால் பனியின் வீச்சும் பரவலாக காணப்படலாம். பறக்கும் பனிப்பொழிவு காரணமாக பயண நிலைமைகள் அபாயகரமானதாக அமையலாம்.

நகர்ப்புற பகுதிகளில் அவசர நேர போக்குவரத்து கணிசமான அளவு பாதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
ரொறொன்ரோ நகர பனிப்பொழிவை விட நகரத்தின் வடக்கில் குறைந்த அளவிலான பனிப்பொழிவு காணப்படலாம் எனவும் CP24 வானிலை ஆய்வாளர் பில் கல்ரர் தெரிவிக்கின்றார்.

 

winter4winterwinter1winter3

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *