குளவி கொட்டுக்கு இலக்காகி கட்டுகஸ்தொட்டை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் மாணவர்கள் 200 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனுடன் குளவி தாக்குதலுக்கு உள்ளான 19 ஆசிரியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை பாடசாலைக்கு அருகில் இருந்த குளவி கூடு கலைந்ததில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என அதன் பிரதி பணிப்பாளர், மருத்துவர் நிஸங்க விஜேயவர்தன குறிப்பிட்டுள்ளார்..

