குமரி மாவட்டம் மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை, குளச்சல், பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க 10-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

