மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள அறிக்கைக்கு ஏற்ப குற்றவாளிகளைத் தண்டிக்க தடைகளை இடவேண்டாம் என ஆளும் கட்சி, எதிர்க் கட்சியினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
மக்களின் சொத்துக்களை சூரையாடியுள்ள குற்றவாளிகளைத் தண்டிக்கும் போது அதற்கான ஒத்துழைப்பை வழங்கி தன்னைப் பழப்படுத்துமாறும், தடைகளையும் முட்டுக் கட்டைகளையும் ஏற்படுத்தி விடாதிருக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.