இலங்கை இராணுவம் வன்முறையை ஏற்படுத்த தயாராகி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் மக்களை அடக்குவதற்கு திட்டமிடுவதாகவும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நபர்கள் சுமத்தும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இராணுவம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
போராட்டகாரர்களுக்கு எதிராக வன்முறையை துண்டி விட இராணுவம் தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ நேற்று தெரிவித்திருந்தார்.
கடவத்தையில் உள்ள இராணுவ கமாண்டோ படைப் பிரிவின் முகாமில் சேவையாற்றும் படையினருக்கு போராட்டகாரர்களை அடக்குவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் போராட்டகார்கள் எழுப்பும் கோஷங்களை எழுப்பியவாறு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதேவேளை போராட்டகாரர்களை அடக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என சரத் பொன்சேகா, இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]