Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குற்­றச் செயல்­கள் கட்­டுப்­ப­பாட்டடில் வடக்­குப் பிர­திப் பொலிஸ்மா அதி­பர் பெருமிதம்!!

August 19, 2018
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்த குற்­றச்­செ­யல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த சிறப்­புப் பொலிஸ் குழுக்­கள் கள­மி­றக்­கப்­பட்­டன. சுற்­றுக் காவல் நட­வ­டிக்­கை­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இத­னூ­டாக குற்­றச் செயல்­களை நாம் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வந்­து­விட்­டோம். இவ்­வாறு வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொசான் பெர்­ணான்டோ தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வடக்­கில் உள்ள 53 பொலிஸ் பிரி­வு­க­ளில் 5 பொலிஸ் பிரி­வு­க­ளில்­தான் அதிக வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றன. தற்­போது சிறப்பு நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. சமூக விரோ­தச் செயற்­பா­டு­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பா­ணம், கோப்­பாய், சுன்­னா­கம், மானிப்­பாய், காங்­கே­சன்­துறை ஆகிய பொலிஸ் பிரி­வு­க­ளில் அதிக சமூக விரோ­தச் செயல்­கள் நடை­பெற்­றன. அவற்­றைத் தடுக்க பொலிஸ் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டன. குற்­றச் செயல்­கள் தற்­போது கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பொது­மக்­க­ளுக்­கும் பொலி­ஸா­ருக்­கும் இடையே நல்­லு­ற­வும், தொடர்­பா­ட­லும் இருக்க வேண்­டும். மக்­கள் எந்த முறைப்­பா­டாக இருந்­தா­லும் எனக்கு அறி­விக்­க­லாம். முறைப்­பா­டு­க­ளைக் கடி­தம் மூல­மும் அனுப்­ப­லாம். வடக்கு மாகாண பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொசான் பெர்­னாண்டோ காங்­கே­சன்­துறை என்ற முக­வ­ரிக்கு அனுப்­ப­லாம். அலை­பேசி ஊடாக தக­வல்­கள் தர விரும்­பு­ப­வர்­கள் 076 609 3030 என்ற தொலை­பேசி எண்­ணுக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­தித் தக­வல் தர­லாம்.

பொலி­ஸா­ரின் அறி­வு­றுத்­தல்­கள் அடங்­கிய 5 ஆயி­ரம் துண்­ட­றிக்­கை­கள் பொது­மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த மக்­கள் பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­ற­னர். வன்­மு­றைச் சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த பொது மக்­கள் எம்­மு­டன் இணைந்து செயற்­பட வேண்­டும் – என்­றார்.

Previous Post

ஆவாக் குழுவிலுள்ள மகனை மீட்டு தாருங்கள்- தாயார் கோரிக்கை!!

Next Post

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை – 35

Next Post

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை – 35

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures