பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகரும், பாடலாசிரியருமான சினேகன், நடிகை சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘குறுக்கு வழி’ என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
‘வல்லதேசம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் என். டி. நந்தா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குறுக்கு வழி’. இந்த திரைப்படத்தில் ‘சூப்பர் டூப்பர்’ பட புகழ் நடிகர் துருவா பிரனய் என இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் கவிஞரும், நடிகரும், பாடலாசிரியருமான சினேகன், ‘கேர் ஆஃப் காதல் ‘புகழ் நடிகர் தீபன், நடிகைகள் சாக்ஷி அகர்வால், ஷீரா, மிப்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவை இயக்குனர் என் டி நந்தா கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாராகிவரும் ‘குறுக்கு வழி’ படத்தில், வாழ்க்கையில் வெற்றி பெற குறுக்கு வழியை பயன்படுத்தினால் எம்மாதிரியான பின் விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]