குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கொழுந்து விட்டெரியும் காட்டுத் தீ அபாயத்தால் ஆயிரக்கணக்கானோர் தம் வதிவிடங்களில் இருந்து வெளியேற்றம்
Central Coast பிராந்தியத்தின் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள Gracemere நகரத்தில் இருந்து எட்டாயிரம் வரையிலான குடியிருப்பாளர்கள் பரவும் காட்டுத் தீயினால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
South of Mackay இலுள்ள Campwin Beach இலிருந்தும் 50 பேர் வரையிலானோரை வெளியேறச் செய்திருக்கிறார்கள். வெளியேற மறுத்தவர்களைக் கைது செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் மத்திய மற்றும் வடக்குப் பிரதேசங்களில் 200 வரையிலான காட்டுத் தீ பரவல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
Deepwater, Baffle Creek இற்கு அண்மித்த இடங்கள் Rules Beach மற்றும் Oyster Creek ஆகிய இடங்களிலிருந்தும் மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய வானியல் அமைப்பு (Bureau of Meteorology) “catastrophic” fire danger என்று அறிவித்யிருக்கிறது. அதாவது உச்சபட்ச அபாயம் ஏற்படுத்தக் கூடிய தீ பரவல் பாதிப்பு இருக்குமென எச்சரித்துள்ளது.
நேற்று அதி கூடிய வெப்ப நிலையைச் சந்தித்திருக்கும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அதன் தலை நகரத்தில் 37.9 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருக்கிறது.
இருப்பினும் நேற்றைய கடும் சூடான காலநிலையில் இருந்து மாறுதல் ஏற்படுவதால் தீ கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீராக மேற்கொள்ளவும் புதிய அபாயங்களில் இருந்து காக்கவும் வழியேற்படுமென தீயணைப்புப் படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதே வேளை சிட்னி உள்ளிட்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய மழையால் பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.