செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார் என தமிழ்நாட்டின் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

செம்மணி புதைகுழி உள்ளிட்ட தமிழர் மீதான மனித உரிமை மீறல்(ஜெனோசைட்) தகவல்களைஇ போராட்டங்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி ஊடகவியலாளராக செயல்படும் குமணனை ‘பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழாக விசாரணைக்கு கொண்டு வந்துள்ளது அனுராவின் அரசு.
குமணனின் புகைப்படங்கள் கூர்மையானவை ஆவணப்படுத்தும் வகையிலான தகவல்களை உள்ளடக்கியவை. உலகளாவிய தரங்களுடனான இப்புகைப்பட பதிவுகள் ஊடகங்களுக்கு மட்டுமல்ல சர்வதேச விசாரணைக்கும் பயன்படுபவை. செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார்.
இலங்கையின் அனுரா அரசு இடதுசாரி அரசு எனவும் சிவப்பு அலை இலங்கையில் வீசுகிறதெனவும் பரப்புரை செய்யும் தமிழ்நாட்டு இடதுசாரிகள் வரை செம்மணி குறித்தும் குமணன் போன்றோர் மீதான அடக்குமுறைகள் குறித்தும் வெளிப்படையாக பேச வேண்டும்.
சிங்கள பேரினவாதிகளிடத்தில் கம்யூனிசம் ஒருகாலும் பூக்காது. இந்திய பார்ப்பனியத்தின் நிழலில் பாசிசம் மட்டுமே பூக்கும்.
சிங்கள பேரினவாதியான அனுராவின் ஜெ.வி.பி – என்.பி.பி அரசிற்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள்.