அருவக்காலு குப்பை சேகரிப்பு பகுதியில் நேற்றிரவு (07) பாரிய வெடிப்புச் சத்தமொன்று எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பிரதேசத்திற்கு அருகிலுள்ள சேரக்குளி மற்றும் கரத்தீவு மக்கள் இந்த சப்தத்தையும் அதிர்வையும் உணர்ந்துள்ளனர்.
பாரிய சப்தத்துடன் பெரும் அதிர்வொன்றையும் உணர முடிந்ததாகவும் அம்மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு 8.45 இற்கும் 9.00 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரையில் இதற்கான காரணம் அறியப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.
வெடிப்புச் சப்தத்துடன் அங்கு சேவையிலிருந்த அத்தனை ஊழியர்களும் வெளியேற்றப்பட்டதாகவும், எவருக்கும் எதுவித சேதங்களும் ஏற்பட வில்லையெனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

