முன்னாள் சாம்பியன் மேனி பாக்கியோ தொழில்முறை குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார்.
தனது முகநூல் பக்கத்தில் 15 நிமிட காணொளியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். காணொளியில் பாக்கியோ தனது மதிப்புமிக்க குணத்துச் சண்டை வாழ்க்கையில் தனக்கு உதவிய மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
26 ஆண்டுகளின் 72 தொழில்முறை குணத்துச் சண்டை போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.
1995 ஆம் ஆண்டு 16 வயதில் தனது தொழில்முறை குத்துச் சண்டையில் அறிமுகமான பிலிப்பைன்ஸ் வீரர் பாக்கியோ, ஐந்து வெவ்வேறு எடை வகுப்புகளில் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் குத்துச்சண்டை வீரர் ஆனார்.
மேலும் நான்கு வெவ்வேறு தசாப்தங்களில் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கெடுத்த ஒரே குத்துச்சண்டை வீரர் ஆவார்.
குத்துச்சண்டை நட்சத்திரம் மேனி பக்கியோ, 2022 பிலிப்பைன்ஸ் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதனால் அவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று, அரசயலில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]