Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குகையில் 15 ஆண்டாகச் சிறைவைக்கப்பட்ட பெண்!

August 8, 2018
in News, Politics, World
0
குகையில் 15 ஆண்டாகச் சிறைவைக்கப்பட்ட பெண்!

கும்மிருட்டில் 10 நிமிடம் இருப்பதற்கே பதைபதைக்கும் இதயம்.

ஒரு பெண் அத்தகைய குகையில் 15 ஆண்டு சிறைவைக்கப்பட்டிருந்தாராம்!

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் உள்ள குகையில் கடத்திவைக்கப்பட்டிருந்த 28 வயதுப் பெண்ணை மீட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கிராமத்தில் தம்மை மந்திரவாதி எனச் சொல்லிக் கொண்டு திரியும் 83 வயது நபர் பெண்ணைக் கடத்திவைத்திருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

13 வயதில் பெண் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

தீய சக்தி தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி ஜாகோ என்று அழைக்கப்படும் அந்நபர் பெண்ணைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது.

பத்தாண்டுக்கும் மேல் பெண்ணைப் பாலியல்ரீதியாக அந்த ஆடவர் கொடுமைப்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

பிள்ளைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் பாலியல் வன்முறையின் கீழும் ஆடவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2003ஆம் ஆண்டு 13 வயதில் பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்ட குடும்பத்தினர் அந்த மந்திரவாதியிடமே மகளை விட்டுச்சென்றனர்.

அதே ஆண்டு பெண்ணைக் காணவில்லை என்று புகாரும் கொடுக்கப்பட்டது.

பெண் ஜக்கர்த்தாவுக்கு வேலை தேடிச்சென்றுவிட்டதாக ஜாகோ குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.

பல ஆண்டுத் தேடுதலுக்குப் பின்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் காலும்பாங் எனும் கிராமத்துக் குகையில் பெண்ணை அதிகாரிகள் மீட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு 15 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Previous Post

தொடரூந்து நிலையத்தில் குவிந்த 1,500 வரையான பயணிகள்!!

Next Post

அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் – விக்ரம்

Next Post

அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் - விக்ரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures