Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான பொது பட்டமளிப்பு விழா

October 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான பொது பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான பொது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் மற்றும் 8ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகம்
இப்பொது பட்டமளிப்பு விழாவில், 1760 கலாநிதி பட்டம், பட்டப்பின் படிப்பு பட்டங்கள், உள்வாரி, மற்றும் வெளிவாரி பட்டங்கள் வழங்கி உறுதி செய்யப்படவுள்ளன.

இப்பட்டமளிப்பு விழாவிற்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமை தாங்குவதுடன் பட்டதாரிகளின் பட்டங்களையும் வழங்கி உறுதிசெய்வார்.

மேலும் இலங்கை, மாலைதீவு மற்றும் தென் ஆசியாவிற்கு உரித்தான உலகவங்கியின் முன்னனி பொருளியலாளரும் மனித அபிவிருத்திக்கான தலைவருமான கலாநிதி கர்-அத்துருபான இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் நிகழ்வாக ஒக்டோபர் 7ம் திகதி கலாநிதிப்பட்டம், விஞ்ஞான கல்வியில் முதுமாணி, விவசாய விஞ்ஞானத்தில் முதுமாணி, கல்வியியல் முதுமாணி, கலை முதுமாணி, வியாபார நிர்வாக முதுமாணி, அபிவிருத்தி பொருளியல் முதுமாணி, முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டம் ஆகிய 55 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை 213 இளமாணி பட்டங்களும் ஏனைய இரண்டாவது மூன்றாவது அமர்வுகளில் முறையே 274 மற்றும் 318 இளமாணிப் பட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

இரண்டாம் நாள் நிகழ்வாக ஒக்டோபர் 8ம் திகதி முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது அமர்வுகளில் முறையே 251, 338, 311 இளமாணிப்பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.

Previous Post

யாழில் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் !

Next Post

இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து வடக்கில் தமது காணிகளுக்கு வேலி அமைக்கும் மக்கள்

Next Post
இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து வடக்கில் தமது காணிகளுக்கு வேலி அமைக்கும் மக்கள்

இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து வடக்கில் தமது காணிகளுக்கு வேலி அமைக்கும் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures