Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிழக்கு கடற்கரை சாலையில் பாராசூட் சாகசம்

December 27, 2017
in News, Politics, World
0
கிழக்கு கடற்கரை சாலையில் பாராசூட் சாகசம்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரையோர விடுதிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தற்போது வடநெம்மேலி பாம்பு பண்ணை அருகே நடைபெறும் பாராசூட் சாகசம் சுற்றுலாப் பயணிகளுக்கு திரில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.பலவக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பைலட்டாக இருந்து சுற்றுலா பயணிகளை பாராசூட்டில் அழைத்துச் செல்கிறார். 15 நிமிடத்துக்கு ரூ. 2500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த பாராசூட் சாகசம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை மட்டுமே நடக்கும். 50 கிலொவுக்கு மேல் எடை கொண்ட நபர்கள் மட்டும் இந்த வான் சாகசத்தை அனுபவிக்கலாம்.

வடநெம்மேலி கடற்கரையில் இருந்து புறப்படும் பாராசூட் கோவளம் வரை கடற்கரை மார்க்கமாகச் சுற்றி வரும். புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் தரை இறக்கப்படும்.இது குறித்து பாராசூட் சாகசம் செய்தவர்கள் கூறும்போது, இந்தப் பயணம் திரிலாகவும், உற்சாகமாகவும் இருந்தது. வான்வெளியில் கடற்கரை அழகை ரசிப்பது வித்தியாசமாக இருந்தது என்றனர்.

இதுபற்றி பாராசூட்டை இயக்கும் மணிகண்டன் கூறியதாவது:-
இந்த பாராசூட் சாகச பயணம் மிகவும் பாதுகாப்பானது. இதில் பயணம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணம், ஹெல்மெட் வழங்கப்படும். பாராசூட்டில் இரண்டு நபர்கள் அமரும் வகையில் இருக்கை உள்ளது. இதில் ஒன்றில் நானும், மற்றொரு இருக்கையில் சுற்றுலா பயணியும் இருப்போம். காற்றின் வேகத்துக்கு ஏற்ப சாகச பயணம் தொடரும். காற்று வேகம் குறைந்தாலும் பாராசூட்டில் உள்ள மோட்டார் மூலம் சுற்றி வரலாம். எந்தப் பிரச்சினையும் இருக்காது. எனவே சாகச பயணம் செய்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல்

Next Post

றெக்க கட்டி பறக்கப் போகும் மாருதி சுசுகி

Next Post

றெக்க கட்டி பறக்கப் போகும் மாருதி சுசுகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures