Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிழக்கு ஆட்­சி­யைப் பிடிக்க மகிந்­த­வு­டன் கைகோர்ப்பு

August 17, 2017
in News
0

மகிந்த அணி­யு­டன் கை கோர்த்து கிழக்கு மாகாண சபை­யின் ஆட்­சியை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி கைப்­பற்­றும். இவ்­வாறு இரா­ஜாங்க அமைச்­சர் ஹிஸ்­புல்­லாஹ் தெரி­வித்­தார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் முஸ்­லிம் சம்­மே­ள­னக் கூட்­டம் அதன் தலை­வர் இரா­ஜாங்க அமைச்­சர் ஏ.எச்.எம்.பௌசி தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை மாலை கட்­சி­யின் தலை­மை­ய­கத்­தில் நடை­பெற்­றது.

இங்கு இரா­ஜாங்க அமைச்­சர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
பத­விக்­கா­லம் நிறை­வ­டை­யும் கிழக்கு மாகாண சபை உள்­ளிட்ட மூன்று மாகாண சபை­க­ளி­ன­தும் ஆயுள் காலத்தை நீடிக்­காது அதனைக் கலைத்து விட்டு மாகாண சபைத் தேர்­தலை உரிய நேரத்­தில் நடத்த சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.

நாங்­கள் மூன்று மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லுக்கு தயா­ராக வேண்­டும். இந்­தத் தேர்­த­லா­னது சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் முஸ்­லிம் வேட்­பா­ளர்­க­ளுக்கு மிகுந்த சவால் மிக்­க­தாக அமை­யும். சவால்­களை முறி­ய­டித்து எவ்­வாறு வெல்­வது என்­பது குறித்து நாங்­கள் இப்­போதே ஆராய வேண்­டும்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மகிந்த அணி – மைத்­திரி அணி என்று பிரிந்­துள்­ளமை இரு தரப்பு முஸ்­லிம் வேட்­பா­ளர்­க­ளுக்­கும் பாதிப்­பாக அமை­யும். நாட்­டில் தலை­தூக்­கி­யுள்ள இன­வாத செயற்­பா­டு­க­ளால் வடக்கு– – கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே சுதந்­தி­ரக் கட்­சி­யில் போட்­டி­யி­டும் முஸ்­லிம் வேட்­பா­ளர்­க­ளுக்கு பெரும்­பான்மை மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெறு­வது என்­பது கடி­ன­மா­ன­தா­கும்.

கிழக்கு மாகாண சபை உரு­வாக்­கப்­பட்ட பின்­னர் முதல் இரண்டு மாகாண சபை­க­ளை­யும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணியே கைப்­பற்­றி­யது. துர­திர்ஷ்டவ­ச­மாக தற்­போது அதி­க­மான ஆச­னங்­களை நாங்­கள் வைத்­தி­ருந்­தும் எதிர்க்­கட்­சி­யி­லேயே அமர்ந்­துள்­ளோம்.

சவால்­கள் நிறைந்த கிழக்கு மாகாண சபைத் தேர்­த­லில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி தலை­மை­யி­லான ஆட்­சி­யொன்றை அமைப்­ப­தற்கு தேவை­யான வியூ­கங்­க­ளை­யும் – கலந்­து­ரை­யா­டல்­க­ளை­யும் நாங்­கள் முடுக்கி விட்­டுள்­ளோம். கிழக்கு மாகா­ணத்­தில் மகிந்த அணி – மைத்­திரி அணி என்று பிள­வு­பட்டு போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை.

அவ்­வாறு போட்­டி­யிட்­டால் அது எமக்குப் பாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். இரு அணி­க­ளை­யும் இணைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்­தலை எதிர்­கொள்­வது சம்­பந்­த­மாக ஆராய்ந்து வரு­கின்­றோம் – –என்­றார்.

Previous Post

வீதி அபி­வி­ருத்தி 142 மில்­லி­யன் ஒதுக்­கீடு

Next Post

தனங்களப்பு விபத்தில் முதியவர் காயம்

Next Post
தனங்களப்பு விபத்தில் முதியவர் காயம்

தனங்களப்பு விபத்தில் முதியவர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures